டெல்லியில் நிறுவப்பட்ட நேதாஜியின் ஹாலோகிராம் தற்காலிகமாக மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
மழை மற்றும் அதிவேக காற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு திரிணாமூல் காங்கிரஸ் எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நேதாஜி சுபாஷ் சந்திர போசின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 23ந்தேதி டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜியின் ஹாலோகிராம் உருவத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். கடந்த மாதம் 28 மற்றும் 29ந்தேதிகளில் முதல்முறையாக நேதாஜி ஹாலோகிராம் அணைத்து வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.