உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் சட்டமன்றத் தொகுதயில் போட்டியிடும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் யோகி. தமது ஆட்சியில் வேலையின்மை குறைந்து விட்டதாக புள்ளி விவரங்களுடன் பொதுமக்களிடம் விளக்கினார்.
தனிநபர் வருமானம் பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் போன்றவை பாஜகவின் வளர்ச்சித் திட்டங்களால் ஏற்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி வாக்கு சேகரித்தார்.
சமாஜ் வாதி கட்சி ஆட்சியில் இருந்த போது கல்லறைகளுக்கு சுவர் எழுப்ப நிதி ஒதுக்கி ஊழல் செய்ததாகவும் யோகி குற்றம் சாட்டினார்