பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உத்தரப்பிரதேச தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கிறார்.
மீரட், நொய்டா, காசியாபாத், அலிகார், ஹாபுர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொள்வார்.
ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்ற உத்தரகாண்ட் பிரச்சாரத்தையடுத்து பிரதமர் மோடியின் இரண்டாவது டிஜிட்டல் பொதுக்கூட்டம் இது. இதே போன்ற காணொலி பிரச்சாரத்தை மோடி பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலிலும் செய்ய உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முழு அளவிலான பிரச்சாரக் கூட்டங்களுக்குத் தடைவிதித்துள்ள தேர்தல் ஆணையம் ஆயிரம் பேர் மேல் மிகாமல் கூட்டங்களை நடத்திக் கொள்ளும்படி அரசியல் கட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. பிரதமரின் கூட்டங்களுக்கு லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள் என்பதால் காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்ய மோடி முடிவு செய்துள்ளார்