கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஒரே நாளில் வெவ்வேறு நாடுகளில் இருந்து கடத்திவரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வளைகுடா நாடுகளில் இருந்து சிலர் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சுங்க அதிகாரிகள் Opration Desert Storm என்ற பெயரில் அனைத்து விமானங்களையும், பயணிகளும் உடமைகளும் சோதனைக்கு உட்படுத்தினர். இதில், பயணிகள் தங்கள் உடமைகளிலும், பொருட்களிலும் மறைத்து வைத்து கடத்தி வந்த 23 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு பத்து கோடி ரூபாய் எனக் கூறிய அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட 22 பயணிகளையும் ஒரே நாளில் கைது செய்தனர். இவர்கள் ஒரே குழுவை சேர்ந்தவர்களா? அல்லது வேறு நபர்களுக்காக தங்கத்தை கடத்தி வந்தார்களா? என்பது பற்றி சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.