லடாக் எல்லையில் இந்திய வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த சீன வீரர்களின் எண்ணிக்கை அந்நாட்டின் அதிகாரப்பூர்வமான கணக்கை விடவும் 9 மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15,16 ஆகிய இரண்டு நாட்களில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா-சீனா படைகள் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் சீனாவுக்கு கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவும் 20க்கு மேற்பட்ட சீன வீரர்கள் உயிரிழந்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்தது.
ஆஸ்திரேலிய நாளிதழ் வெளியிட்ட தகவவின் படி இருட்டில் ஆற்றைக் கடந்து வர முயன்ற சீன வீரர்கள் 38 பேர் மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.