இந்தியாவின் தடுப்பூசி இயக்கம் வேகம் எடுத்ததால்தான் கொரோனா மூன்றாவது அலையில் சுமார் ஒருலட்சம் பேர் உயிர்பிழைத்ததாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
20 மாநிலங்களில் நடைபெற்ற மாதிரி ஆய்வில் கொரோனா மூன்றாவது அலையின் போது பெரும்பாலான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அலையான டெல்டா வைரசின் பரவலின் போது உயிர்ச்சேதம் அதிகமாக இருந்தது.
ஆனால் தடுப்பூசிகள் செலுத்தும் பணியில் மத்திய மாநில அரசுகள் முழுவீச்சாக செயல்பட்டு மூன்றாவது அலையின் வீரியத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக SBI economists.ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.