மகாராஷ்டிராவில், 300 கோடி மதிப்பிலான பிட்காயின் கிரிப்டோ கரன்சி வைத்திருந்த நபரை கடத்தியதாக போலீஸ் கான்ஸ்டபிள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
புனேவை சேர்ந்த பங்கு வர்த்தகரான வினய் நாயக் என்பவரிடம் கிரிப்டோகரன்சி இருப்பதை சைபர் கிரைம் பிரிவில் பணிபுரிந்து வந்த காவலர் திலீப் துக்காராம் கந்தாரே தெரிந்து கொண்டதாகவும், இதன் காரணமாக கடத்தி பிட்காயின்களைப் பறிக்க முயன்றதாக காவல் நிலையத்தில் வினய் நாயக் புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட கான்ஸ்டபிள் உட்பட 8 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.