பீகாரில் காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையத்தில் செவ்வாய்க்கிழமை 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் 12ஆம் வகுப்பு இடைநிலைதேர்வை கார் முகப்பு விளக்குகளுடன் எழுதினர்.
தேர்வு மையத்திற்கு வினாத்தாள் தாமதமாக வந்ததாகக் கூறப்படும் நிலையில். போதிய வெளிச்சம் இல்லாததால் மாணவர்கள் தேர்வு எழுத மறுத்தனர்.
அங்கு மின்சாரம், ஜெனரேட்டர் வசதிகள் இல்லாததால் அங்கு நின்று கொண்டிருந்த கார்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி தேர்வு நடத்தப்பட்டது.