இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்றை விட இன்றும் சற்று குறைந்து 1 லட்சத்து 61 ஆயிரத்து 386 ஆக பதிவாகி உள்ளது.
ஆனால் ஒரு நாள் உயிரிழப்பு நேற்றை விட அதிகரித்து ஆயிரத்து 733 ஆக உள்ளது. 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 109 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், தினசரி பெருந்தொற்று பாதிப்பு விகிதம் 9 புள்ளி 26 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் நாடு முழுவதும் 16 லட்சத்து 21 ஆயிரத்து 603 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.