இந்தியாவின் பொருளாதார மதிப்பு 2025-26-ஆம் நிதியாண்டில் 5 டிரில்லியன் டாலரை எட்டும் என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேஸ்வரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பேசிய அவர், செலாவணி மதிப்பு விகிதத்தின் போக்கு, வளர்ந்த நாடுகளில் உள்ள நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் இந்திய ரூபாயின் மதிப்பு ஸ்திரமாகவும் வலுவாகவும் இருக்கும் என்றார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை 8 முதல் 9 சதவீதமாக தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டால், அது டாலர் மதிப்பில் 8 சதவீத வளர்ச்சியாக இருக்கும் என்றும் இந்தப் போக்கு தொடர்ந்து சாத்தியமானால் 2025-26 ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதார மதிப்பு 5 டிரில்லியன் டாலரை எட்டும் என்றும் தெரிவித்தார்.