மும்பை நகரில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதையடுத்து இரவு நேர ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
உணவகங்கள், திரையரங்குகளுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. 50 சதவீத பங்கேற்புடன் வழக்கமான நேரத்தில் அவைசெயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தலங்கள் வழக்கமான நேரத்துக்கு திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. வாரச்சந்தைகளும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைகள், பூங்காக்கள் திறக்க நேரக்கட்டுப்பாடு நீக்கப்பட்டது. பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள் 50 சதவீத நபர்களுடன் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.திருமணங்களுக்கு 200 பேர் வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளது.