காரில் தனியாக ஓட்டிச் செல்லுபவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற டெல்லி அரசின் உத்தரவு அபத்தமானது என்று உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இன்னும் ஏன் இந்த உத்தரவு நீடிக்கிறது , ஏன் இதை இன்னும் திரும்பப் பெறவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
டெல்லியில் கார் ஓட்டுபவர் தனியாக இருந்த போதும் முகக்கவசம் அணியவில்லை என்று காவல்துறையினர் அபராத ரசீதுகளை அளித்து வந்ததற்கு எதிராக பல்வேறு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டதையடுத்து நீதிமன்றம் கோவிட் தொடர்பான வழக்குகளின் விசாரணையுடன் இதனையும் சேர்த்து விசாரணை நடத்தியது