விரைவில் இந்தியாவில் 5 மாநிலங்களில் 16 புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவாவில் விமான நிலையம் கட்டப்படும் என்று குறிப்பிட்டார்.
அதேபோல் சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூர், பிலாஸ்பூர் மற்றும் ஜக்தால்பூரில் விமான நிலையங்கள் கட்டப்படும் என்றும் பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தில் ஒன்பது விமான நிலையங்களும், மகாராஷ்டிராவில் இரண்டும், ராஜஸ்தானில் ஒன்றும் கட்டப்படும் என்றும் தெரிவித்தார்.
கடந்த 70 ஆண்டுகளில் 74 விமான நிலையங்கள் மட்டுமே கட்டப்பட்டதாகக் கூறிய சிந்தியா, கடந்த 7 ஆண்டுகளில் 66 விமான நிலையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.