அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து ஏராளமான கஞ்சா பொதிகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச எல்லைப் பகுதியில் சமீபகாலமாக போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரீம்கஞ்ச் என்ற இடத்தில் அஸ்ஸாம் மாநில போலீசார் நடத்திய சோதனையில் திரிபுராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 ஆயிரத்து 360 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் புர்பா பர்தமான் என்ற மாவட்டத்தில் நடத்திய சோதனையில் 824 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இரு நிகழ்வுகளிலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.