மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் வணிக வளாகம் முன் வெடிகுண்டு வெடித்ததில் கடைகள் சேதமடைந்தன.
கைடெய்லட் பகுதியில் ஜன நெருக்கடி அதிகம் காணப்படும் வணிக வளாகம் முன் வெடிகுண்டு வெடித்ததது. சம்பவத்தின் போது மக்கள் நெருக்கடி அதிகம் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதது.
சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வெடிகுண்டு தாக்குதலுக்கு முதலமைச்சர் கான்ரட் சங்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.