கேரளத்தில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக ஞாயிறு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கேரளத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் ஞாயிறு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மருந்தகங்கள், பாலகங்கள், காய்கறிக் கடைகள், மளிகைக்கடைகள் தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள், வாடகை வாகனங்கள் இயக்கப்படவில்லை.
இன்றியமையாப் பணிக்குச் செல்வோரின் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது. கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.