கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து 9 மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்துகிறார்.
இமாச்சல், பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட், டெல்லி, லடாக், உத்தரப் பிரதேசம், சண்டிகர் ஆகிய மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.