நாட்டில் தினசரி சுமார் 3 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகும் நிலையில், பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பின் பாதிப்பு கணிசமாக குறையத் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில மாநிலங்கள் மற்றும் மெட்ரோ நகரங்களில் தற்போது பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதாகவும், கொரோனா தடுப்பூசி பெருமளவில் செலுத்தியது 3ஆம் ஆலையின் தாக்கத்தை குறைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டில் கடந்த டிசம்பரில் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது முதல், தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்புகள் சற்று குறைந்து வருவதுடன் உயிரிழப்போர் விகிதமும் கட்டுக்குள் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.