தலைநகர் டெல்லியில் இரவிலும் அதிகாலையிலும் கடும் குளிர் நிலவுகிறது.
இரவில் குளிர் தாளாமல் ஏராளமானோர் அரசு நடத்தும் இரவுக் காப்பகங்களை நாடி வருகின்றனர். அவர்களுக்கு இரவில் உறங்க கம்பளியும் காலையில் டீ, ரஸ்க் போன்றவையும் வழங்கப்படுவதாக விடுதி பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரவில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. அக்சர்தாம் கோவில் பகுதியில் பனிமூடிய காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிகாலையிலும் அதிக பனிமூட்டம்காரணமாக வாகனங்கள் நகராமல் போக்குவரத்து தேங்கியுள்ளது