குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், ஒரு வாரத்துக்குத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள அவர், தன்னுடன் தொடர்பில் இருந்தோரும் தனிமைப்படுத்திக் கொள்வதுடன் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோல நாடாளுமன்றக் கட்டடத்தில் பணியாற்றுவோரில் 875 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மாநிலங்களவைச் செயலகத்தில் மட்டும் 271 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.