இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு சமூகப் பரவல் நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் இன்சாகாக் அமைப்பு அறிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் பெரும்பாலான மெட்ரோ நகரங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதாகவும் அங்கும் ஒமைக்ரான் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஒமைக்ரானின் மாறுபட்ட வகையான பி.ஏ.2 திரிபும் நாட்டில் கணிசமான பகுதியில் பரவி வருவதால், எஸ்-ஜீன் மாறுபாட்டின் அடிப்படையிலான சோதனையில் அதிகளவில் தவறான நெகடிவ் முடிவுகள் வர வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் ஒமைக்ரான் தொற்று உள்ளவர்களுக்கு இதுவரை அறிகுறியில்லாமல் அல்லது மிதமான அளவிலும் பாதிப்பு இருந்தாலும், அச்சுறுத்தல் நிலை மாறாமல் உள்ளதாகவும் இன்சாகாக் கூறியுள்ளது.