கர்நாடகா மாநிலம் தாவணகெரே நகரில் சைபுதீன் என்பவர் தனியார் லாட்ஜில் மேலாளராக பணியாற்றும் நிலையில், பணியை முடித்துவிட்டு இரவில் வீட்டிற்கு செல்ல புறப்பட்டபோது தனது இருசக்கர வாகனத்தில் சாலையை கடந்தார்.
அப்போது, தனது வலதுபுறம் வாகனங்கள் வருவதை சரிவர கவனிக்காத நிலையில், சாலையின் குறுக்கே சென்ற அவர் மீது எதிர்பாராவிதமாக அரசுப் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் சைபுதீன் சாலையில் தூக்கி எறியப்பட்டதுடன், அவரது இருசக்கர வாகனம் பேருந்தின் அடியில் சிக்கியது. தலைக்கவசம் அணிந்திருந்ததால் விபத்தில் உயிர்தப்பிய சைபுதீனை மீட்ட அப்பகுதி மக்கள், அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.