மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்குப் போய் சேருவதை உறுதிப்படுத்தவும் மக்களின் கருத்துகளை அறியவும் பிரதமர் மோடி மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார்.
பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய அரசின் திட்டங்கள் மாவட்டம் தோறும் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கான முனைப்பை பிரதமர் மேற்கொண்டுள்ளார்.
இதன் ஒருபகுதியாக மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ள மோடி அரசின் திட்டங்கள் குறித்தும் அதற்கான மக்களின் கருத்துகளை குறித்தும் விவாதிப்பார்.
நிறைவேற்றப்பட்டு வரும் புதிய திட்டங்களின் தற்போதைய நிலவரம் குறித்தும் மோடி இந்நிகழ்வின் மூலமாகக் கேட்டு அறிவார் என்று பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.