தந்தை சுயமாக சம்பாதித்த சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு என்ற சட்டம் 1956ம் ஆண்டுக்கு முன்னரும் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இது தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கில் உச்சநீதிமன்ற அமர்வு சென்னை உயர்நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்தியது.
1956ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வாரிசு உரிமை சட்டத்துக்கு முன்பாகவே இறப்புகள் ஏற்பட்டு இருந்தாலும், தந்தை சொத்தில் மகள்களுக்கும் உரிமை உண்டு,’ என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. வேறு ஆண் வாரிசுகள் இல்லாத பட்சத்தில் மகள்களுக்கு உரிமை உள்ளதாக நீதிபதிகள் தங்கள் 51 பக்க தீர்ப்பில் குறிப்பிட்டனர்.
இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி, 2005ம் ஆண்டிற்கு முன்பாக மூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு இருந்தது. பின்னர், 2005ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி இந்த சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, மகள்களுக்கும் இந்த சொத்துரிமை அளிக்கப்பட்டது.