கொரோனா பரவல் அதிகரித்து வரும் போதும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு தடுப்பூசிகளே முக்கியக் காரணமாக விளங்குவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசின் இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளைப் போல் இந்த முறை அதிக உயிரிழப்புகள் ஏற்படவில்லை' என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதற்கு தடுப்பூசிகள் மிகவும் உதவியிருப்பதாகவும் சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மூன்றாம் அலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்தாலும், இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளைப் போல் இந்த முறை அதிக உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 94 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் 'டோஸ்' செலுத்தப்பட்டுள்ளது; 72 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.இதேபோல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோரில் 52 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.