பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற வீராங்கனை அவனி லெகராவுக்கு, தான் உறுதியளித்தபடி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கார் ஒன்றை பரிசளித்துள்ளார்,
மஹிந்திரா தொழில் குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா. இதற்காக அவருக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி தெரிவித்து, அவனி லெகரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.