பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட இரு இண்டிகோ பயணிகள் விமானங்கள் மோதவிருந்த சம்பவம், கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது.
கடந்த 7-ந் தேதி கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட ஒரு விமானமும், புவனேஸ்வருக்கு புறப்பட்ட மற்றொரு விமானமும் ஒரே நேரத்தில் புறப்பட்ட போது விபத்து நிகழ நேரிட்டது.
கெம்பேகவுடா விமான நிலையத்தில் இரண்டு ஓடுபாதைகள் இருக்கின்றன. சம்பவத்தன்று, தெற்கு ஓடுபாதை பராமரிப்புக்காக மூடப்பட்ட நிலையில், வடக்கு ஓடுபாதையிலேயே விமானங்கள் தரையிறங்கவும் புறப்படவும் அனுமதிக்கப்பட்டன.
இந்த தகவல் தெற்கு ஓடுதளத்தில் இருந்த அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், ஓடுபாதையில் இருந்து ஒரே நேரத்தில் புறப்பட்ட இரு விமானங்களும் ஒரே திசையில் சென்ற போது, ஒன்றுடன் ஒன்று மோதும் நிலை ஏற்பட்டது.
அதற்குள் ரேடார் கட்டுப்பாட்டாளர் பார்த்து தலையிட்டு விமானிகளை எச்சரித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.