திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டத்தில் இரண்டு தலை மற்றும் நான்கு கண்களுடன் கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.
சமதல் பாரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் பசு ஒன்று, கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த அதிசய கன்றுக்குட்டியை ஈன்றது.
தகவல் அக்கிராமம் முழுவதும் காட்டுத் தீயாய் பரவியதையடுத்து, கிராம மக்கள் பலர் கன்றுக்குட்டியை வியந்து பார்த்து செல்கின்றனர்.
இது குறித்து பேசிய கால்நடைத்துறை அதிகாரி ஒருவர், இது போன்ற நிகழ்வுகள் மிக அரிதானது என்றும் கன்றுக்குட்டியின் உயிர் பிழைப்பு விகிதம் மிகவும் குறைவாகவே இருப்பதால் அதனை காப்பாற்றுவது மிகவும் கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.