பீகாரில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் பலியாகி இருப்பதுடன் 20-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர்.
கோபால்கஞ்ச் நகருக்கருகே உள்ள குச்சய்கோட் மற்றும் விஷாம்பர்பூர் கிராம பகுதிகளை சேர்ந்த 24 விவசாயிகள் படகில் அருகே உள்ள கிராமத்திற்கு பணிக்காக சென்றனர். பகவான்பூர் அருகே சிக்ரானா ஆற்றில் படகு சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் மட்டும் நீந்தி கரையை வந்தடைந்தார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கியவர்களை தேடும் பணியை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தை மீட்டுள்ள மீட்புப்படையினர் மாயமாகியுள்ள 20-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.