வங்காள தேசத்தின் பிரபலமான 45 வயது நடிகை ரைமா இஸ்லாம் சிமுவின் இறந்த உடலை கோணிப்பையில் இருந்து போலீசார் மீட்டனர்.
காலாபாகன் காவல் நிலையத்தில் ரைமாவின் உறவினர்கள் அவரைக் காணவில்லை என்று புகார் அளித்திருந்தனர். இதையடுத்து நடிகையைத் தேடி வந்த போலீசார் டாக்காவின் புறநகர்ப் பகுதியில் சாக்குமூட்டையில் இருந்த ரைமாவின் உடலை மீட்டனர்,உடற்கூராய்வுக்கு அவர் உடல் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
ரைமாவின் கணவர் ஷகாவத் அலியை போலீசார் விசாரணை செய்ததில் தமது மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தாம் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.