ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் எண்ணெய் டேங்குகள் மீது நடைபெற்ற டிரோன் தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜயீத்துடன் தொலைபேசியில் உரையாடிய ஜெய்சங்கர், தீவிரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்தத சம்பவத்துக்கு வேதனை தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அனைத்து வகையான உதவிகளும் வழங்கப்படும் என்று ஐக்கிய அமீரக அரசு உறுதி அளித்துள்ளதாகவும், இது தொடர்பாக இந்திய தூதரகம் அமீரக அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.