பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள், கொரோனா தடுப்பூசி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் மற்றும் பட்ஜெட் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.
இதற்கிடையில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.