கொரோனா பாதித்தவர்களுக்கு 2 அல்லது 3 வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் அவர்கள் காசநோய் மற்றும் பிற நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா தடுப்பதற்கான வழிமுறைகள், சிகிச்சைகள் தொடர்பான திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா பாதித்தவர்களுக்கு ஸ்டீராய்ட் மருந்துகள் வழங்குவதை மருந்துவர்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான அளவு அல்லது தேவையானதை விட அதிக நேரம் ஸ்டீராய்ட் மருந்துகளை வழங்கும்போது கருப்பு பூஞ்சை போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பாதித்தவர்களுக்கான சிகிச்சை முறை லேசான, மிதமான, கடுமையான என 3 வகையாக பிரிக்கப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சகம், மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் இல்லாதவர்கள் லேசான நோய் பாதித்தவர்களாக கருதப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளது.