இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இரண்டரை லட்சத்தை நெருங்கியுள்ளது.
ஒரே நாளில் புதிதாக 2 லட்சத்து 47 ஆயிரத்து 417 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 380 பேர் பலியாகி உள்ள நிலையில், 84 ஆயிரத்து 825 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாடு முழுவதும் 11 லட்சத்து 17 ஆயிரத்து 531 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். நாட்டில் இதுவரை 5 ஆயிரத்து 488 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.