மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜினை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் ககன்யான் திட்டத்துக்கான கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனையில் அனைத்து அம்சங்களையும் என்ஜினின் செயல்திறன் பூர்த்தி செய்தது என்றும் இந்தப் பரிசோதனை வெற்றிபெற்றது ககன்யான் திட்டத்தில் முக்கிய மைல்கல்லாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் மேலும் 4 பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.