மேகதாது அணை கட்டும் திட்டத்தை நிறைவேற்றக் கோரி காங்கிரஸ் கட்சியினர் மேற்கொண்டு வரும் பாதயாத்திரையை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்? என்று கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், விமுறைகளை மீறி காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் பாதயாத்திரைக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், காங்கிரஸ் கட்சியினர் முறையாக அனுமதி பெற்று தான் இந்த பாதயாத்திரையை நடத்துகிறார்களா? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
இது போன்ற கொரோனா சூழலில் பாதயாத்திரைக்கு எவ்வாறு அனுமதி வழங்கினீர்கள்? என்று அரசு தரப்புக்கும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாநில அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி வரும் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.