சபரிமலை ஐயப்பன் கோவில் பண்டாரத்தில் இருந்து பணம் களவுபோவதைத் தடுக்க வலிமையான அதிகாரியைப் பணியமர்த்த வேண்டும் எனக் கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 16ஆம் நாள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் பணத்தைக் களவாடியது தெரியவந்தது. அவர் அறையில் நடத்திய சோதனையில் 42 ஆயிரத்து 470 ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் ஜனவரி எட்டாம் நாள் காணிக்கைப் பணம் எண்ணிய பணியாளர் மூவாயிரத்து ஐந்நூறு ரூபாயுடன் பிடிபட்டார். இது குறித்துக் கேரள அரசுக்கு அறிவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம் பணம் களவுபோவதைத் தடுக்கத் தொடர்ந்து கண்காணிக்கும்படி தெரிவித்துள்ளது.