தெலுங்கானாவில் மனைவியுடனான தகராறில் 2 பிள்ளைகளை கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு தந்தை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகபூப் நகரைச் சேர்ந்த ராம்குமார் என்ற அந்த நபர், மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வந்தார். திருமணமாகி 10ஆண்டுகள் ஆன நிலையில், சாக் ஷி என்ற மகளும், ஜானி என்ற மகனும் இருந்தனர். பொங்கல் விடுமுறைக்காக பணியிடத்தில் இருந்து வீட்டுக்கு வந்திருந்த ராம்குமார், தாம் இதுவரை அனுப்பிய பணத்துக்கு மனைவியிடம் கணக்கு கேட்டதாகவும், இந்த உரையாடல் இருவருக்கும் இடையே தகராறாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த ராம்குமார் மனைவி தூங்கியவுடன், பிள்ளைகளை தூக்கிச் சென்று கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டு, அவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.