வரும் நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 புள்ளி 7 சதவீதமாக அதிகரிக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.
உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் என்ற தலைப்பில் உலக வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் முடிவில் உள்நாட்டு உற்பத்தி 8 புள்ளி 3 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், வரும் நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி அதன் அண்டை நாடுகளை காட்டிலும் வலுவாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு பிந்தைய இந்திய பொருளாதாரம் கணிக்கப்பட்ட அளவைவிட வளர்ச்சி அடைந்ததாக உலக வங்கி தெரிவித்துள்ளது.