முதல் நாளில் 10 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி நாடு முமுவதும் தொடங்கியது.
ஏறத்தாழ 7 லட்சத்து 40 ஆயிரம் முன்கள மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோயாளிகள் 3 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான ஒரு கோடி பேருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.