இந்தோ பசிபிக் பிரச்சினையில் சீனாவின் கடல் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி எச்சரிக்க, ஜெர்மனியின் அதிநவீன போர்க்கப்பல் மும்பைக்கு அடுத்த வாரம் வர உள்ளது.
இந்தோ பசிபிக் பகுதியில் சர்வதேச விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று கடந்த வாரம் சீனாவுக்கு ஜெர்மனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.baryen frigate என்ற இந்தப் போர்க்கப்பல் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாதவகையில் சீனாவின் கடல் எல்லைக்குள் பயணித்தது.
கடல் வணிகத்தில் சர்வதேச விதிகள் மதிக்க வேண்டும் என்று அண்மையில் பிரான்ஸ் அறிவித்துள்ளது. தொடர்ந்து சீனாவுக்கு கடிவாளம் போடும் இரண்டாவது நாடாக ஜெர்மனி களமிறங்கியுள்ளது.