இந்தியா சீனா எல்லைப் பிரச்சினை தொடர்பான 14வது சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை லடாக் எல்லையில் சீனப்பகுதியான சூசுல்-மோல்டா அருகே நடைபெறுகிறது.
இதில் இரண்டு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். இந்திய அதிகாரிகள் குழு லெப்டினன்ட் ஜெனரல் அனிந்தியா சென் குப்தா தலைமையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் சீனா குவித்துள்ள படைகள் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய இடம் பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முந்தைய 13வது சுற்றுப் பேச்சுவார்த்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி நடைபெற்றது.
இருதரப்பிலும் கருத்து வேறுபாடு நீடித்ததால் பேச்சுவார்த்தையில் முடக்கம் ஏற்பட்டது.எல்லைப் பிரச்சினைக்கு சுமுகத்தீர்வு காணவும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும் இந்தியாவுடன் சீனா உடன்பட்டது.இதைத் தொடர்ந்து 14வது சுற்று பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.