மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கொரோனா பாஸிட்டிவ் ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
மிகவும் லேசான அறிகுறிகளே இருப்பதாக ராஜ்நாத்சிங் தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களில் தம்மை தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் பரிசோதனை செய்துக் கொள்ளுமாறும் ராஜ்நாத்சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.