டெல்லியில் காவல்துறை கூடுதல் ஆணையர் சின்மோய் பிஸ்வால் உட்பட ஆயிரம் காவலர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் தினசரி பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் உட்பட அங்குள்ள அனைத்து பிரிவு காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் பலருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.
இதையடுத்து அனைத்து காவலர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.