டெல்லியில் முழு ஊரடங்கு விதிக்கும் எந்தத் திட்டமும் இல்லை என முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஒரேநாளில் புதிதாக 22 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கேஜ்ரிவால் காணொலி மூலம் பேசினார்.
மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்துகொண்டால் ஊரடங்கு விதிக்க வேண்டிய தேவையில்லை எனத் தெரிவித்தார்.
தொற்றுக்கு ஆளானோரில் குறைந்த எண்ணிக்கையிலானோரே மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அரவிந்த் கேஜ்ரிவால் கூறினார்.