கோவாக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி நீண்ட காலம் பாதுகாப்பு அளிக்கிறது என்றும் இதில் எந்த ஒரு பின்விளைவும் இல்லை என்றும் அதனை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த அந் நிறுவனம் நீண்ட கால பரிசோதனைகளின் அடிப்படையில் கோவாக்சின் பூஸ்டர் தடுப்பூசி சிறந்த பலன்களைத் தருவதாகத் தெரிவித்துள்ளது. இரண்டாவது டோசுக்குப் பின்னர் ஆறுமாதம் கழித்து பூஸ்டர் போட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
90 சதவீதம் பேருக்கு இந்த தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காணப்பட்டதாகவும், வைரஸ்களுக்கு எதிராக ஐந்து மடங்கு ஆற்றலுடன் இருப்பதாகவும் பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது