இலங்கை முல்லைத்தீவு அருகே குப்புறப் புரண்ட நிலையில் கரை ஒதுங்கி இருக்கும் கப்பல் ஒன்றை அந்நாட்டு கப்பற்படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அதிகாலையில் மீன்பிடிப்பதற்காகக் கிளம்பியுள்ளனர். கிழக்கு நாயாறு கடற்கரையிலிருந்து 25 மீட்டர் தூரத்தில் கடலில் தலைகீழாக புரண்ட நிலையில் கப்பல் ஒன்றைப் பார்த்த மீனவர்கள் கடற்படையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த அதிகாரிகள் சுமார் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட அந்தப் கப்பல் எந்த நாட்டுக்குச் சொந்தமானது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.