ஏழு மாநிலங்களிடையான இரண்டாம் கட்டப் பசுமை மின்னாற்றல் தொகுப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
காற்றாலை, சூரிய ஒளி மின்னுற்பத்தி உள்ளிட்ட புதுப்பிக்கவல்ல எரியாற்றல் வளங்கள் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் மின்னுற்பத்தி செய்வது என்கிற இலக்கை அடைய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. முதற்கட்டப் பசுமை மின்னாற்றல் தொகுப்புத் திட்டத்தை ஏற்கெனவே செயல்படுத்தி வருகிறது.
இரண்டாம் கட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், குஜராத், இமாச்சலம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 20 ஜிகாவாட் மின்னுற்பத்தி செய்யவும், பத்தாயிரத்து 750 கிலோமீட்டர் மின்தடம், 27 ஆயிரத்து 500 மெகா ஓல்ட் ஆம்பியர் திறனுள்ள துணைமின்நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.