சர்ச்சைக்குரிய புல்லிபாய் செல்போன் செயலியை உருவாக்கிய நபரை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை மோசமாக சித்தரித்து ஏலம் விடுவதாக அறிவித்த ‘புல்லி பாய்' என்ற செயலியின் மாஸ்டர் மைண்ட்டாக இருந்தவர் உள்பட மூன்று பேர் ஏற்கனவே மும்பை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக அந்த செயலியை உருவாக்கிய நீரஜ்பிஷ்னாய் என்பவரை அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர். 21 வயதான நீரஜ்பிஷ்னாய் போபாலில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருவது தெரியவந்துள்ளது.