நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்ததாலும், பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும் இந்தியப் பங்குச்சந்தைகளில் வணிகம் வீழ்ச்சியடைந்துள்ளது.
முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குகளை விற்றதால் மும்பை பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டெண் சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கம் முதலே சரியத் தொடங்கியது. முற்பகல் பத்து மணியளவில் சென்செக்ஸ் 775 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 448 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீட்டெண் நிப்டி 222 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 703 ஆக இருந்தது. துறைமுக நிறுவனங்கள், தனியார் வங்கிகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கு விலை 2 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது.